Wednesday, May 23, 2018

டவர் கம்பெனி  எதிர்த்து 

மாபெரும்  வெளிநடப்பு  போராட்டம் 28/05/2018

23/05/2018இன்று AUA அணைத்து  சங்கங்களின் கூட்டமைப்பு டெல்லியில் கூடியது. நம் NFTE  BSNL  சங்கத்தின் சார்பில் தோழர்  சந்தேஸ்வர்  சிங்  சம்மேளனச் செயலர் , தோழர் மஹாவீர் சிங் , தோழர் ராஜ் மௌலி  உள்ளிட்ட தலைமை நிலைய தோழர்கள் கலந்து கொண்டனர். 

  • 28/05/2018 அன்று  ஹைதராபத்  (Hydrabad ) ல்  நடைபெற உள்ள BSNL  Board of  Directors கூட்டத்தில் Tower company குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. 
  • இதை  எதிர்த்து போராட்ட திட்டங்களை  அணைத்து சங்கங்களும் AUA கூட்டதில்   முடிவெடுத்து அறிவித்துள்ளன. .
  •  28/05/2018 அன்று அணைத்து சங்கங்களின்   பொதுச்செயலர்கள் ஹைதராபாத் செல்வது.
  •  BSNL  Board  மீட்டிங் நடைபெறு ம்  இடத்தில் (ஹைதராபாதில்) பெருந்திரள்  ஆர்ப்பாட்டம்  பேரணியை  தலைமை தாங்கி நடத்துவது .
  •  28/05/2018 அன்று நாடுமுழுவதும்  அனைவரும் BSNL பணியிடங்களில்  இருந்து   வெளிநடப்பு  போராட்டம்  நடத்துவது .
  •  28/05/2018 நாடுமுழுவதும் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது. 
  •  28/05/2018 நாடுமுழுவதும் பத்திரிகையாளர்கள்  சந்திப்பு  நடத்துவது .

அணைத்து தோழர்களும் தோழியர்களும் பங்கேற்று போராட்டத்தை  வெற்றிகரமாக்குவோம். அரசின் டவர்  கம்பெனி திட்டத்தை முறியடிப்போம் .
ஒன்றுபட்டு  போராடுவோம். வெற்றிபெறுவோம்.

வாழ்த்துக்களுடன் 
தோழமையுள்ள 
A  ராபர்ட்ஸ் 
மாவட்டச்  செயலர் 

Saturday, May 19, 2018

நமது பார்வையில்
New Digital Communication Policy 2018
ஆக்கம் தோழர். பட்டாபி.
மொழியாக்கம் நீலகண்டன்.

https://docs.google.com/document/d/1oF7z7V_BdDeogZGbYWMh0XN1YzQwfUCQ8GlsDi6vOEU/edit?usp=drivesdk

Thursday, May 17, 2018

தோழர்  ஜெகன் பிறந்தநாள் விழா 

கோவை மாவட்ட சங்க அலுவலகத்தில் 17/05/2018 அன்று காலை 1100 மணியளவில் விழா துவங்கியது. 

தோழர் ராபர்ட்ஸ் DS  அனைவரையும் வரவேற்று தோழர் ஜெகன் உடன் அவரது அனுபவங்களை  பகிர்ந்து கொண்டார்..  

தோழர் N ராமகிருஷ்ணன் DP தலைமையுரையில் தோழர் ஜெகன்  அவர்கள் இறுதியாக கலந்து கொண்ட மேட்டுப்பாள யம் நிகழ்வு மற்றும் அவர் நீங்கா நினைவுகளை பதிவு செய்தார் .

BSNLEU  மாநிலச்செயலர் தோழர்  பாபு ராதாகிருஷ்ணன் , மாவட்ட செயலர் தோழர் c  ராஜேந்திர ன் மற்றும் முன்னணித் தோழர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தோழர் பாபு ராதாகிருஷ்ணன்  உரையில் ஜெகன் அவர் தம் தோழமையை , மாற்று கருத்து கொன்டோரையும் அரவணைக்கும் பண்பையும்  புகழ்ந்தார். போபாலில்  எல்லோரும் தோற்ற போதும் தோழர் ஜெகன் பெற்ற  வெற்றி எல்லா தரப்பினரும் மதிக்கும், போற்றும் ஒப்பற்ற தலைவராக ஜெகன் விளங்கினார் என்பதற்க்கு சான்று என்றார் .

தோழர் L  சுப்பாராயன் CT தன திருமணத்தை தோழர் ஜெகன் தலைமையேற்று  நடத்தியதை  நினைவு கூர்ந்தார்.

தோழர் B அருணாச்சலம் DS Retd அஸோஸியேஷன்  சார்பில்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் .

தோழர் A  செம்மல் அமுதம் ஜெகன் பிறந்த நாளை இளையர் தினமாக கொண்டாடும் தருணத்தில், புதிய தோழர்களை, தோழியர்களை குறிப்பாக  BSNL ல்  பணியில்  சேர்ந்தவர்களை  உணர்வு பூர்வமாய்  இயக்கங்களில்  பங்கேற்கவைக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார் .

தோழர் கோட்டியப்பன்  நன்றியுரையுடன் விழா  நிறைவுற்றது.

                                                                                                A  ராபர்ட்ஸ் 
                                                                                                மாவட்டச் செயலர் 


Wednesday, May 16, 2018

சுழல்  மாற்றல் 

தோழர்களே  கடந்த 2016 மே  மாதம்  கோவையிலேருந்து  வெளியூர்களுக்கு மாற்றலில் சென்ற்வர்களை   உடனடியாக மீண்டும்  கோவைக்கு அவர்கள் விரும்பும் இடங்களுக்கு மாற்றல் உத்தரவு போடவேண்டும் என்று வலியுறுத்தி  நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம்.(BSNLEU  சங்கமும் இணைந்துதிங்கள் கிழமை  PGM அவர்களை சந்திக்க திட்டமிட்டு  உள்ளோம் .நேரில் நம் கோரிக்கையை வலியுறுத்துவோம். சாதகமான முன்னேற்றம்  ஏற்படும் என்று நம்புகிறோம். இல்லையென்றால் / தேவைப்பட்டால்  போராட்டக்களம்  காண்போம் .
                                                                       வாழ்த்துக்களுடன் 
                                              A  ராபர்ட்ஸ் 
                                              மாவட்டச்செயலர்    

கோவை மாவட்டச்சங்கம் சார்பில்

 இளைஞர் தினமாக தோழர் ஜெகன் பிறந்த நாள் விழா 17/05/2018 அன்று காலை 1030 மணியளவில்  சங்க அலுவலகத்தில் நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

A. ராபர்ட்ஸ்.

மாவட்டச் செயலர்.


Tuesday, May 15, 2018

தோழர் சந்தேஸ்வர்சிங்  
கோவை வருகை 


Our NFTE BSNL General Secretary Com  Chandeshwar Singh addressed at Coimbatore in a meeting arranged on Sunday 13/05/2018. He spoke on various issues of Telecom Sector.
1 3rd PRC
2 Tower Company
3 PLI
4 Stagnation of Scale
5 Medical allowance
6 Recruitment of TT outsiders as Multi Tasking Cader
7 Departmental Examination for the promotion of TT and JE
8 Membership Verification
In the course of speech he touched upon various related issues also.
Finally he emphasised the need of NFTE BSNL to continue as a Recognized Union. Our foremost task is to protect the welfare and rights of our Telecom  Workers.
At the Airport, in the afternoon, he was warmly welcomed by our Circle Secretary Com Natarajan Krishnamoorthy  ,  Com Roberts A District Secretary, Com K Balasubramaniam ADS and Com Semmalamudham CHQ Special Invitte.
The meeting was presided over by Com Ramakrishnan Natarajan District President and Com Gopalakrishnan Ssg Federation Secretary (Ex) also addressed the gathering. Com Natarajan Circle Secretary and Com Subbarayan Lakshman Circle Treasurer also addressed the gathering.

நமது கோவை மாவட்டச் சங்கத்தின் சார்பில்  தோழர் காரல்மார்க்ஸ் 201 பிறந்த நாள் கருத்தரங்கம் 05/05/2018 அன்று  நடைபெற்றது.  தோழர்.பாலசந்தர் மார்க்சிய சிந்தனையாளர் கலந்து கொண்டு ஆழ்ந்த கருத்தாளம் மிக்க உரையாற்றினார்.